விவேக்கின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது..!
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி 4:35 மணிக்கு உயிரிழந்தார். எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளித்த நிலையில் அவர் உயிரிழந்தார். ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சின்ன கலைவாணர். சமூக சேவகர் என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
சிவாஜி படத்தில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.






