ராஜஸ்தானில் இருந்து 320 டோஸ் கொரொனா தடுப்பு மருந்து திருட்டு..!
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கொரொனா தடுப்பு மருந்து திருடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்திரி நகரில் உள்ள கண்காட்சி அரசு மருத்துவமனையில் இருந்து தடுப்பூசிகள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திருட்டு செவ்வாய் இரவு தெரிய வந்ததாகவும் அதன் அடிப்படையில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் திங்கள் கிழமை திருட்டு நடைபெற்று இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர் .
காவல்துறையினர் ஒருபுறம் விசாரணையை தொடங்கி இருக்கும் நிலையில் துறைரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.






