நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மூவரை காயப்படுத்திய சிறுத்தை..!
குடியாத்தம் அடுத்ததாங்கள் கலர் பாளையம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்த தூங்கியுள்ளார் .
வேலாயுதம் குடும்பத்தினர் வீட்டிற்கு 2:00 மணி அளவில் எங்கிருந்தோ வந்த சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்து வேலாயுதத்தின் மனைவி பிரேமா, அவரது மகன் மனோகரன், மகள் மகாலட்சுமி ஆகியோரை தாக்க முயன்று உள்ளது. தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்கள் வெளியே ஓடி வந்து விட வீட்டுக்குள் இருந்த கோழியின் சப்தம் கேட்டு சிறுத்தை வீட்டுக்குள் சுற்றியுள்ளது.
வீட்டோடு வைத்து சிறுத்தையை பூட்டிவிட்டு சுற்றியிருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் .சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் வீட்டுக்குள் சிக்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.






