--- --:--:-- --

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகளை சுட்டுக் கொன்ற தந்தை.!

7

சூர் அருகே பண்டிகைக்கு வீட்டுக்கு வந்த மகளை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்செட்டி அருகே கரடிகள் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் தனது மகளின் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

 

மூன்று மாத கர்ப்பிணியான அவர் திகாரி பண்டிகையை ஒட்டி விருந்துக்காக கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் அருணாச்சலம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அருணாச்சலம் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை மனைவியை சுட முயன்றுள்ளார்.

 

தாயை காப்பாற்ற குறுக்கே வந்த அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அருணாச்சலத்தை தேடிவருகின்றனர்.

 

விருந்துக்கு வந்த மகளை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon