கிண்டல் செய்த போதை ஆசாமிக்கு செருப்படி கொடுத்த பெண்…!
கடலூரில் கேலி, கிண்டல் செய்த போதை ஆசாமிக்கு பெண் ஒருவர் செருப்பால் தர்ம அடி கொடுத்து உள்ளார். திட்டக்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் வந்த ஆசாமி ஒருவர் கேலி செய்தும் தகாத வார்த்தையால் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த பெண் காலில் இருந்த செருப்பை கழற்றி போதை ஆசாமியின் கன்னத்தில் அடித்தார். அடி தாங்க முடியாமலும் பொதுமக்கள் கூடியதும் பயந்துபோன போதை ஆசாமி அந்த வழியாக வந்த பேருந்தில் ஏறி தப்பினார்.






