ராஜஸ்தானில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!
கொரொனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக ராஜஸ்தானில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் சந்தைகள் அனைத்தும் மாலை 5 மணிக்கு மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் தனியார் விழாக்களில் அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.






