--- --:--:-- --

கொரொனா குறித்து ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

2

போதுமான அளவு கொரொனா தடுப்பூசிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கொரொனாக்கு எதிரான யுத்தத்தில் சமுதாயக் குழுக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் மோடி ஒரு கோடி தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதாக குறிப்பிட்டார்.

 

சமூக அமைப்புகள் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுவது உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் காணப்பட்ட மக்களின் பங்களிப்பு தற்போதும் தேவைப்படுவதாக குறிப்பிட்டார். இதை உறுதி செய்வதில் ஆளுநர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

 

தடுப்பூசி மற்றும் மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஆளுநர்கள் ஆயுஷ் மருந்துகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம் எனக் கூறினார். கொரொனா பாதிக்கப்பட்டவர்களை கண்காணிப்பது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது மற்றும் பரிசோதனைகளை அதிகரிப்பதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

 

ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் 60% என்பதிலிருந்து 70 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசினார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் நடைபெற்ற ஆலோசனையில் பங்கேற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon