12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு குறித்து மீண்டும் இன்று ஆலோசனை..!
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை ஒத்தி வைப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பத்து மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.
ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா என பல கேள்விகள் எழுந்து வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி தீர்ப்பை தள்ளி வைக்க பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 10-ம் தேதி ஒத்தி வைப்பது தொடர்பாக நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை வருவாய் துறை பள்ளிக் கல்வித்துறை செயலர் பங்கேற்கின்றனர்.
சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பணிரெண்டாம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






