உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள டிக் டாக் நிறுவனர்..!
கடந்தாண்டு அமெரிக்கா, இந்தியா என முன்னணி நாடுகளால் புறக்கணிப்புகாளான சீன செயலியான டிக் டாக் நிறுவனர் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
38 வயது மட்டுமே ஆகும் அவரின் சொத்து மதிப்பு 4 லட்சத்து 38 ஆயிரம் கோடிகளை தொட்டுள்ளதாக கோடீஸ்வரர்களின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக் டாக் உரிமையாளரின் பை டான்ஸ் சந்தை மதிப்பு 18 லட்சத்து 25 ஆயிரம் கோடிகளாக உள்ளது.
அதில் அவருக்கு 25 சதவீத உரிமை உள்ளதால் அவரது நிகர சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இத்துடன் செய்தி தளத்தையும் பைடான்ஸ் நடத்துகிறது.






