--- --:--:-- --

12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்..!

8

12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து ஆலோசித்து முதலமைச்சர் அறிவிப்பார் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் விழிப்புணர்வுக்காக வழங்கப்பட்டுள்ள 4 மினி வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

 

இசைக்கலைஞர்கள் நடனத்துடன் பரப்புரை வாகனம் புறப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே ஒழிக்க முடியும் எனக் கூறியவர் பொதுவெளியில் மக்கள் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

 

2 லட்சத்து 7 ஆயிரம் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்த அவர் மதிய கிடங்கில் உள்ள 6 லட்சம் தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்காக கேட்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon