பாதாள சாக்கடை குழியில் சைக்கிளோடு தவறி விழுந்த நபர்..!
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த பணி நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையங்கள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் பல்வேறு போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி சென்றவர் பாதாளசாக்கடையில் விழும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அவர் காப்பாற்றப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






