--- --:--:-- --

கருப்பின ராணுவ வீரரை முரட்டுத்தனமாக சாலையில் தள்ளிவிடும் போலீசார்..!

5

மெரிக்காவில் கருப்பின ராணுவ வீரரை போலீசார் முரட்டுத்தனமாக சாலையில் தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ராணுவ அதிகாரியான நசாரியா புதிதாக வாங்கிய காரில் மின்சார நகர் வழியாக சென்றபோது காவலர் ஒருவர் காரை நிறுத்தும்படி ஆணையிட்டுள்ளார்.

 

நசாரியா காரை ஓரமாக நிறுத்துவதற்குள் அந்த காவலர் நம்பர் பிளேட் இல்லாத காரில் ஒருவர் தப்பிச் செல்வதாக வயர்லஸ் கருவி மூலம் தகவல் எழுப்பினார். மற்றொரு காவலர் அங்கு வந்துள்ளார். பின்னர் இராணுவ சீருடையில் இருந்த நசாரியாவை கீழே தள்ளிவிட்டு முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கைது செய்தனர்.

 

அப்போது அங்கு வந்த மூத்த போலீஸ் அதிகாரி அவர் மீது எந்த தவறும் இல்லாததால் அவரை விடுவித்தார். போலீசார் மீது உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ள நசாரியா ஒரு மில்லியன் டாலர் நஷ்ட ஈடும் கோரியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon