--- --:--:-- --

கர்ணன் திரைப்படம் நாளை வெளியாகிறது..! கடலுக்குள் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள்..!

11

டிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் நாளை வெளியாவதால் ரசிகர்கள் புதுச்சேரி கடற்பகுதியில் பேனர் வைத்துள்ளனர். கடலுக்குள் பழைய துறைமுக தூண்கள் அழிந்துவிடாமல் இன்றளவும் உள்ளது.

 

சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் இந்தத் தூண்களில் புதுப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் கட்அவுட் வைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது தனுஷ், மாரிசெல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கண்டா வரச் சொல்லுங்க, புராணம் பாடல்கள் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கர்ணன் திரைப்படம் வெளியாவதையொட்டி தனுஷ் ரசிகர்கள் படகு மூலம் சென்று பழைய துறைமுக தூண்களில் கர்ணன் பட போஸ்டரை கட்டியுள்ளனர். கடலுக்குள் போஸ்டர் இருப்பது மக்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon