--- --:--:-- --

அரசு  சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

12

டலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரசு  சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். வேளாங்கன்னியில் இருந்து அரசு போக்குவரத்து கழக சொகுசு பேருந்து நேற்று இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

 

கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வந்த பேருந்து வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

 

ஓட்டுநர், பயணிகள் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி ஓட்டுனர் கிளீனர் உட்பட 22 பேர் படுகாயமடைந்து கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்து நிகழ்ந்த பகுதியில் கடுமையான மூடுபனி ஆக இருந்த நிலையில் பேருந்து வளைவில் திரும்பும் என்ற போது எதிரே வந்த லாரி புலப்படாமல் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon