கொரொனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தல்..!
கொரொனா விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறு மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார். தனிமனித இடைவெளி, கைகளை தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
மக்கள் கொரொனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் ஒப்புதல் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.







