--- --:--:-- --

நாளை தேர்தல்… வீடியோ வெளியிட்டு பரபரப்பு கிளம்பும் நடிகர் விவேக்!

vivek

ஆளுமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை; அதை நாம் விட்டுத்தரவே கூடாது. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஜனநாயகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தமிழக சட்ட மன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை காலை 7 மணி முதல், மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, அரசியல் தலைவர்கள் மேற்கொண்டு வந்த அனல் பறக்கும் பிரசாரங்கள் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஓட்டும் நமது உரிமை அதை நாம் விட்டு தரக்கூடாது. நம் ஒருவர் ஓட்டுப் போடவில்லை என்றால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? அல்லது நாம் ஒருவர் ஓட்டு போட்டால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது.

 

அப்படி நினைப்பது ஜனநாயகத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு. ஒவ்வொரு ஆளுமையையும் தேர்ந்தெடுப்பது நமது விரல் மை .அதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுதான் ஜனநாயகத்தின் வலிமை . அதை நாம் எப்போதும் விட்டுக்கொடுக்க கூடாது .அதனால் எல்லோரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். வயதானவர்கள் தபால் மூலமாகவும் வாக்குகளை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மேலும், வாக்குப்பதிவுக்கு செல்லும் போது, முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் வீட்டுக்குள் வந்ததும் சோப் தண்ணீரில் கை கழுவுதல் மிகவும் அவசியம் என்று நடிகர் விவேக் அறிவுறுத்தி இருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon