லார் கிப்பான் குரங்கு சர்ச்சை: நடிகர் விக்ரமிற்குத் தொடர்பு இல்லை – வனத்துறை விளக்கம்
நடிகர் விக்ரம் அபூர்வ வகை ‘லார் கிப்பான்’ குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கும் அந்த குரங்கு விற்பனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது வனத்துறை தரப்பில் தெரியவந்துள்ளது.
அதேவேளையில், அந்த குரங்கின் உரிமையாளரான கேசவநாதன் அதற்கான உரிய ஆவணங்களைக் கைவசம் வைத்திருந்தபோதிலும், அதனை முறையாக அரசிடம் பதிவு செய்யாமல் இருந்த காரணத்திற்காக அவர் மீது வனத்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




