80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி..!
?????????????????????????????????????????????????????????
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சென்னை, திருச்சி, கோவையில் இலவச வாகன வசதி வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகன பயணத்திற்கு 200 ரூபாய் வரையிலான கட்டணத்தை 100 சதவீத தள்ளுபடி யுடன் அதாவது தேர்தல் ஆணையமே முழுவதும் ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனங்களை பயன்படுத்தி இலவச பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 80 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் விருப்பத்தின் பேரில் இந்த வசதியை பெற்று ஜனநாயக கடமையாற்றிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






