--- --:--:-- --

பாஜக வேட்பாளர் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம்..!

3

அசாமில் வாக்குப்பதிவு நடத்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாஜக வேட்பாளர் ஒருவரின் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

 

பதர்க்கண்ட் என்ற தொகுதியில் இந்த இயந்திரம் கொண்டு செல்லப்பட்டபோது கும்பல் ஒன்று வாகனத்தை வழி மறித்ததாகவும் அதைத் தொடர்ந்து அந்த வாகனம் பிரேக் டவுன் ஆனதால் மற்றொரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

 

இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்ட மாற்று வாகனம் அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தேர்தல் அலுவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் ஆணைய வாகனத்தை மரித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon