--- --:--:-- --

பாஜக வேட்பாளரை சிறைபிடித்த புகாரில் 2 திமுகவினர் கைது..!

3

துரைமுகம் பாஜக வேட்பாளரை சிறைபிடித்த புகாரில் திமுகவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் செல்வம் தனது நண்பரான ஆர்எஸ்எஸ் ஐ சேர்ந்த ராஜ் என்பவரை சந்திக்க நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அப்போது அங்கு வந்த திமுகவினர் சிலர் வினோத் செல்வம் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வந்ததாக கூறி சிறைபிடித்தனர். உடனடியாக பாஜகவினர் தகவலறிந்து அங்கு வந்ததால் திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

 

காவலர்கள் வந்து வினோத் செல்வத்தை விசாரித்தனர். இருதரப்பினரும் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் தாக்கியதில் இரு திமுகவினரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon