76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம்..!
டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் காணப்பட்டது. தலைநகரில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக காணப்பட்டது. கடந்த 1945ஆம் ஆண்டில் தான் இதுபோன்ற வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசுவதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடைய டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கோடை வெயில் தாக்கத்தை குறைக்க மோர் போன்றவற்றை அருந்தி வருகின்றனர்.






