கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் விஜயகாந்த்..!
கும்மிடிபூண்டி தொகுதியில் தேமுதிக சார்பில் களமிறங்கும் டில்லியை ஆதரித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் கும்மிடிப்பூண்டியில் தேமுதிக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளவர் டில்லி.
மாவட்ட செயலாளராகவும் செயலாற்றி வருகிறார். தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் அவர்கள் தற்போது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய முதற்கட்ட பிரச்சாரமாக கும்மிடிபூண்டி தொடங்கியுள்ளார்.






