ரஜினிகாந்தும், லெஜண்ட் சரவணனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்தும், லெஜண்ட் சரவணனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. தொழிலதிபர் லெஜண்ட் சரவணா இரட்டை இயக்குனர்களான சிடி மற்றும் ஜெரி இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்தை லெஜண்ட் சரவணன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.






