--- --:--:-- --

தஞ்சையில் மேலும் 7 மாணவர்களுக்கு கொரொனா உறுதியாகியுள்ளது..!

3

ஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்குக் கொரொனா தொற்று கண்டறியப்பட்டது. திருப்பனந்தாள் திருக்கயிலை அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கும் திருவையாறு பகுதியில் உள்ள நான்கு பள்ளி மாணவர்களுக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

 

இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. 90 பேர் இதுவரை நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். அதேபோல கோவை பீளமேடு பகுதியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை ஊழியர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

அதேபோல, கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அன்றாட 100 பேருக்கும் மேலாக தொற்று பதிவாகிறது. இதனால் தொற்று நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைவுபடுத்தி உள்ளது. இந்த நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஊழியர்கள் நால்வருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon