தமிழகத்தில் தேர்தலையொட்டி வருகிற 4 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..!
தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டிய வருகிற நான்காம் தேதி காலை முதல் ஆறாம் தேதி இரவு வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன.






