--- --:--:-- --

தமிழகத்தில் திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் – சத்யபிரதா சாகு

8

தமிழகத்தில் திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் .சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 4 ஆயிரத்து 512 பேர் வேட்பு மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 87 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில் ஒரு லட்சத்து 49 ஆயிரம் பேர் தபால் வாக்களிக்க மனு அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

தேர்தல் கண்காணிப்பு படையினர் இதுவரையில் 231 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் தங்க நகைகள் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்து ரொக்கமாக மட்டும் 83 கோடியே 99 லட்சம் ரூபாயும் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

 

தமிழகத்தில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம் என்றும் கூறினார்.

 

தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் தேதியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த சாகு திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon