--- --:--:-- --

அதிமுக பிரச்சார வாகனம் மோதியதில் துண்டான முதியவரின் கால்..!

7

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அதிமுக பிரச்சார வாகனம் மோதியதில் முதியவரின் கால் துண்டானது. ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரம் வாகனம் மூலம் அதிமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 

தேவிகாபுரம் அருகே பிரச்சார வாகனம் வந்து கொண்டிருந்த போது மதுபோதையில் தள்ளாடியவாறு சாலையோரம் வந்துகொண்டிருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராமலிங்கம் என்பவர் திடீரென பிரச்சார வாகனத்தில் விழுந்தார்.

 

இதில் அவரது வலதுகால் துண்டான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon