செல்போன் தரவுகளை அளித்த நடிகை டாப்சி மற்றும் இயக்குனர் கஷ்யப்..!
நடிகை டாப்ஸி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் தங்களது செல்பேசியில் இருந்த தரவுகளை அழித்திருப்பது வருமான வரித் துறையினரின் சோதனையில் தெரியவந்துள்ளது.
மும்பையில் நடிகை டாப்சி இயக்குனர் அனுராக் காஷ்யப் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ததில் மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் காட்டாத சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நடிகை டாப்ஸி 25 கோடி ரூபாய் அளவுக்கு ஏய்ப்பு செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சோதனையின்போது இருவரது செல்பேசிகளில் தரவுகளை அழித்திருப்பது தெரியவந்ததால் அவற்றைத் திரும்பப் பெற தொழில்நுட்ப வல்லுநர்களை வருமான வரித்துறை அணுகியுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணையை தொடங்கிய போது இருவரும் செல்பேசி தரவுகளை அழித்ததாக கூறப்படுகிறது.






