அண்டார்டிகாவில் பனி பாறையில் ஏற்பட்டுள்ள விரிசல்..!
அண்டார்டிகாவில் பனி பாறை ஒன்றில் மும்பை நகரை விட இரு மடங்கு பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகா, ஆர்ட்டிக் போன்ற பிரதேசங்களில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன.
அந்த வரிசையில் அண்டார்டிகாவின் பெடல் பகுதியில் உள்ள பெரிய பனிப்பாறை ஒன்றில் நீளவாக்கில் விரிசல் ஏற்பட்டிருக்கும் தகவல் பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வே வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இது மும்பை நகரை விட இரு மடங்கு பெரியதாகவும் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி விட பெரியதாகவும் இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அண்டார்டிகாவில் ஏற்படும் மூன்றாவது மிகப் பெரிய பனிப்பாறை விரிசல் இதுவாகும். இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






