--- --:--:-- --

இன்று புதுச்சேரி செல்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா..!

1

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று புதுச்சேரி செல்கிறார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

 

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்கலுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் குறித்து தமிழகத்தில் ஆய்வு நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு இன்று மாலை சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறது.

 

மாலை 5 மணிக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இரவு எட்டரை மணிக்கு புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் சுனில் அரோரா ஆலோசனை நடத்த உள்ளார்.

 

இரண்டாவது நாளாக புதுச்சேரியில் முகாமிடும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் டிஜிபி மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசுகிறது. மேலும் நாளை மாலை ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்கு செல்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon