500 கணக்குகளை முடக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம்..!
விதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் 500 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சார்பில் டுவிட்டர் நிறுவனத்தின் கடத்தப்பட்ட உத்தரவில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி 1178 கணக்குகளை முடக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
உத்தரவுகளுக்கு கட்டுப் படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் மற்றும் மேலும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல் பரப்பிய 500 கணக்குகளை முடக்கியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த கணக்குகளை முடக்கி உள்ளதாகவும் வெளிநாட்டில் செயல்பாட்டில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.






