--- --:--:-- --

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை நீக்கியுள்ளது..!

13

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை நீக்கியுள்ளது. மத்திய அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.

 

நீக்கப்பட்ட செயலிகள் கூகுள் விதிகளுக்குப் புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து அவற்றை தவறாக கையாண்டு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்த புதிய தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 20, 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 100 செயலிளை நீக்கி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

 

மேலும் இதே செய்திகளை தொடர்ந்து வழங்கி வரும் இதர செயலிகள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon