சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது..!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியாகிறது. சிபிஎஸ்சி பொதுத் தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும்.
12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 9ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்வு கால அட்டவணை இன்று வெளியாக உள்ளது. அதனை cbse.nic.in, cbseacademy.nic.in இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.






