சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அயலான் படப்பிடிப்பு நிறைவு..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அயலான் அறிவியல் சார்ந்த படம் என்பதால் ஏராளமான கிராபிக்ஸ் வேலைகள் உள்ளன.
அந்த பணிகளை விரைவில் தொடங்க இயக்குனர் ரவிக்குமார் திட்டமிட்டுள்ளார். மேலும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.






