பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொலை..!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் திருமண நிகழ்ச்சிக்கு பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மணிகண்டன் என்பவரது தங்கையின் திருமணத்திற்காக அவரது நண்பர் தமிழரசன் பேட்டை கூட்ரோடு அருகே பேனர் வைக்க சென்றார்.
அப்போது நெல்லிகுப்பத்தை சேர்ந்த ராகுல் என்பவருக்கும் தமிழரசனுக்கும் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே இருவருக்கும் முன்விரோதம் உள்ள நிலையில்வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதையடுத்து ராகுல் தான் வைத்திருந்த கத்தியால் தமிழரசனின் முதுகில் குத்தியதாக தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய குறிஞ்சிப்பாடி போலீசார் தலைமறைவான ராகுலை தேடி வருகின்றனர்.






