விண்வெளியின் டைனோசர்களை கண்டுபிடித்துள்ள அஸ்ட்ரோசாட்..!
இந்தியாவின் அஸ்ட்ரோசாட் உதவியுடன் விண்வெளியின் டைனோசர்கள் எனப்படும் நட்சத்திர தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.காலத்தால் மிகவும் முற்பட்ட உருண்டை வடிவ பகுதியில் அமைந்துள்ள நட்சத்திரங்கள் விண்வெளியின் டைனோசர்கள் எனப்படுகின்றன.
அத்தகைய நட்சத்திரங்கள், நட்சத்திரங்களின் தோற்றம் அழிவு பற்றிய ஆராய்ச்சிக்கும் மிக முக்கியமானவை. மிகவும் அரிதாக காணப்படும் அத்தகைய நட்சத்திர தொகுதி ஒன்று இந்தியாவின் அஸ்ட்ரோசாட் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்ட்ரோ சாட்டில் உள்ள புற ஊதா தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட தொகுதியில் புற ஊதா பேரொளி நட்சத்திரங்களில் ஒன்று சூரியனைப் போல மூன்று மடங்கு பிரகாசமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.






