--- --:--:-- --

நாளை விவசாயிகளை முதன்முறையாக சந்திக்கிறது உச்சநீதிமன்றக் குழு..!

2

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை உச்சநீதிமன்ற நியமித்துள்ள குழு நாளை முதல் முறையாக சந்தித்து இது குறித்து விளக்கமளிக்கும் உச்சநீதிமன்றம் நியமித்த குழு உறுப்பினர்களில் ஒருவரான அணில் தங்களை நேரில் சந்திக்க விரும்பும் அமைப்புகளுடன் நேரடியான சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

நேரடியாக வர இயலாதவர்கள் உடன் காணொளி வாயிலாக சந்திப்பு நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசும் தங்களுடன் பேச விரும்பினால் அதனை வரவேற்பதாகவும் அவர்களது கருத்துகளுக்கும் செவிமடுப்போம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தங்களுடன் வந்து பேச வைப்பது மிகவும் சவாலான பணி என்று குறிப்பிட்டவர் பிரச்சினைக்கு தீர்வுகாண தங்களால் இயன்ற வரையில் முயற்சிப்போம் எனவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon