--- --:--:-- --

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் இன்று பதவியேற்பு..!

1

மெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு அதிகாரபூர்வமாக பதவியேற்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்கிறார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது.

 

ஜனநாயக கட்சியின் சார்பில் களம் இறங்கிய ஜோபைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றியை அறுவடை செய்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று முறைப்படி பதவி ஏற்பு விழாநடைபெறுகிறது.

 

தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேபிடல் கட்டடத்திற்கு முன்பு இந்த விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. முதலில் தொடக்க உரை இடம்பெறும். இதைத்தொடர்ந்து கமலா ஹாரிஸ் உறுதிமொழியை ஏற்று துணை அதிபராக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.

 

பத்தரை மணிக்கு ஜோ பைடன் பதவியேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இவை தொடர்ந்து பாலிவுட் நடிகர்90 நிமிட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். இந்த விழாவில் பிரபல பாடகி லேடி காகா அமெரிக்க தேசிய கீதத்தை பாடுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon