--- --:--:-- --

இந்தியாவின் சுயமரியாதையை தீண்டாதீர்கள் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

PTI2_24_2020_000042A

PTI2_24_2020_000042A

நாட்டின் சுயமரியாதையை தீண்டினால் எந்த ஒரு வல்லரசு நாட்டுக்கும் தக்க பதிலடி கிடைக்கும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஆயுதப்படை படைவீரர் தினத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்தியா ஒருபோதும் போரை விரும்பவில்லை என்றார்.

 

ஆனால் எந்த ஒரு வல்லரசும், நாட்டின் சுயமரியாதையை புண்படுத்த விரும்பினால் பொருத்தமான பதிலடி கொடுக்கப்படும் என அவர் கூறினார். மற்ற நாடுகளுடன் அமைதியான நல்லுறவையே இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

 

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான மோதலின்போது இந்திய வீரர்கள் துணிச்சலையும் பொறுமையும் வெளிப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். தேஜஸ் விமானங்களை வாங்கும் அரசின் நடவடிக்கையால் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon