--- --:--:-- --

வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்..!

6

டலூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் திடீரென சாமியாடுவது போல் ஆடினார். பூண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது வீட்டுக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது.

 

இதுகுறித்து கடலூர் மாவட்டத்தில் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அவர் சாதுர்யமாக செயல்பட்டு பாம்பை பிடித்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் திடீரென சாமி ஆடுவது போல் ஆடினார்.

 

9 ஆண்டுகளாக இந்த வீட்டில்தான் இருப்பதாகவும் தன்னை வெளியேற்ற வேண்டாம் எனக் கூறிக்கொண்டு அந்தப் பெண் சாமி ஆடினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon