பறவை காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை சரிவு..!
பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களில் 50 காசுகள் குறைந்துள்ளது. ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைதொடர்ந்து கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு எடுத்துச்செல்லப்படும் ஒரு கோடி மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை சரிவடைந்ததை அடுத்து அதன் விலையும் குறைந்துள்ளது. நாமக்கலில் முட்டை விலை நேற்றைய விலையில் இருந்து 25 காசுகள் குறைந்து 4 ரூபாய் 60 காசுகள் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






