--- --:--:-- --

தமிழக – கேரள எல்லைகளில் நடத்தப்படும் வாகன சோதனை..!

10

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி ஆக அங்கிருந்து தமிழகத்திற்கு கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோவை மாவட்டத்தில் கோபாலபுரம், கோவிந்தபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

அங்கு முகாமிட்டு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்கள், கிருமிநாசினிகள் தெரிவித்த பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

மேலும் கேரளாவில் இருந்து கோழி, முட்டை, கோழி தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அப்படியே திருப்பி அனுப்பி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon