நகையை பறிக்கும் போது பெண் கூச்சலிட்டதால் நாக்கை அறுத்த திருடன்..!
ஈரோட்டில் தங்க சங்கிலி பறிக்கப்படும் போது கூச்சலிட்ட பெண்ணை நாக்கை திருடர்கள் அறுத்துவிட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த திருச்செல்வி என்பவர் பணி முடிந்து அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த இருவர் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்தனர். உடனடியாக அவர் கூச்சலிட்டதால் அவரது நாக்கை வெட்டிய கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி உள்ளனர். இதில் காயமடைந்த திருச்செல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட அவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.






