10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான விமானம்..!
இந்தோனேசியாவில் 6 குழந்தைகள் உட்பட 59 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான விமானம் கடலில் விழுந்தத என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டயா நகர் நோக்கி ஸ்ரீவிஜயா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 – 500 ரக விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.25 மணிக்கு கிளம்பியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பலமுறை முயன்றும் விமானத்துடன் ஆன தொடர்பு கிடைக்காததால் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 6 குழந்தைகள், விமானிகள் உட்பட 59 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு அருகிலேயே ஜகார்டா வளைகுடா உள்ளது.
இந்த கடற்பகுதியில் மேற்பரப்பில் பறக்கத் தொடங்கிய போதுதான் விமானம் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கடலுக்குள் விமானம் விழுந்ததா அல்லது வேறு திசையில் சென்று நிலப்பரப்பிலோ அல்லது மலை மீது மோதி விழுந்ததா என்று கோணத்தில் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.






