கொரொனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு நாட்கள் தாமதமாகும்..!
கொரொனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை விமானம் மூலம் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லும் பணி இரண்டு நாட்கள் தாமதமாகும் என சீரம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முன் களப் பணியாளர்களுக்கு விரைவில் செலுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை விமானம் மூலம் இதுவரை எங்கும் கொண்டு செல்லப்படவில்லை என புனே விமான நிலையத்தின் இயக்குனர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதற்கு தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்த பேரம் காரணம் அல்ல எனவும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் அதிகளவில் தடுப்பூசியை நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு மத்திய அரசு முறையாக கூறவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசியை 200 ரூபாய்க்கும் அரசு கொடுக்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தையில் அதன் விலை 1000 ரூபாயாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 5 கோடி தடுப்பூசிகள் புனாவில் உள்ள மஞ்சரி ஆலையில் தயாராக உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.






