பொள்ளாச்சி பாலியல் குற்றம் – அண்ணா அடிக்காதீங்க அண்ணா என கதறி அழுத குரல் இன்னமும் கேட்கிறது
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு காரணமான அதிமுகவினர் உட்பட ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அண்ணா அடிக்காதீங்க அண்ணா என கதறி அழுத குரல் இன்னமும் செவிகளில் ஒலித்துக் இதயத்தை கிழிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகி விட்டதோ என்று நினைத்த நிலையில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பிடிப்பவர்களுக்கு பார் நாகராஜனை போல் உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்து விடக்கூடாது என கூறியிருக்கும் ஸ்டாலின் இந்த வழக்கில் தோண்டத் தோண்ட இன்னும் நிறைய தொடர்புகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடூர வழக்கில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.







