--- --:--:-- --

ஒரு வளையத்திற்குள் 12,638 வைரங்கள் பதித்து கின்னஸ் சாதனை..!

10

த்தரபிரதேச மாநிலத்தில் வைர வியாபாரி ஒருவர் ஒரு வளையத்திற்குள் 12,638 வைரங்கள் பதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மீரட்டை சேர்ந்த ரெனாலி ஜூவல்ஸ் கடையின் உரிமையாளர் ஹர்ஸீத் பன்ஸால் என்பவர் நகை வடிவமைப்பு பாடத்தை பயின்றவராவார்.

 

அப்போது முதலே வளையத்திற்குள் ஏராளமான வைரங்கள் பதித்து புதிதாக நகை ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அவரது எண்ணப்படி தற்போது கண்ணைப் பறிக்கும் வகையில் வைர வளையம் உருவாக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்பு 7,801 வைரங்கள் ஒரு வளையத்திற்குள் பதிக்கப்பட்டது சாதனையாக இருந்து வந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon