--- --:--:-- --

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

7

மிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கல்லங்குறிச்சி, அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon