--- --:--:-- --

13 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கு..!

8

சென்னையில் கடந்த மாதம் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் முக்கிய பிரமுகர்கள் உட்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்தது.

 

அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் சிறுமியின் உறவினரான சாகிதா பானு என்பவரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை கண்டறிந்தனர். இடைத்தரகராக செயல்பட்ட சாகிதா பானு, மதன்குமார் என்பவர்கள் முதலில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

 

தொடர் விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதாக பாஜக பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோ, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜசுந்தரம் உள்ளிட்ட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

 

மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உடல் மற்றும் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சிறுமி முழுமையாக குணமடைந்ததும் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என தகவல் தெரிவிக்கிறது.

 

காவல்துறை இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் அதிகாரிகள் அதில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon