--- --:--:-- --

லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!

3

The Union Minister for Railways Shri Lalu Prasad addressing the Economic Editors’ Conference - 2006, organised by the Press Information Bureau, in New Delhi on November 08, 2006. The Director General (M & C), PIB, Smt Deepak Sandhu is also seen.

கால்நடை தீவன வழக்கில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கருவூலத்திலிருந்து முறைகேடாக பணத்தை எடுத்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது லாலு பிரசாத் யாதவின் சிறைத்தண்டனை தொடர்பான பதிவுகளை கீழ் நீதிமன்றத்தில் இருந்து கொண்டு வந்து விவாதத்திற்கு முன் சரிபார்க்க தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.

 

ஜாமின் மனு தொடர்பான கருத்து தெரிவித்திருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஸ்மிதா ஒவ்வொரு முறையும் ஜாமீன் மனு விசாரணை ஒத்தி போகும்போது தொண்டர்கள் ஏமாற்றம் அடைவதாகவும் கூறியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon